Home /News /employment /

பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.23,000/- சம்பளத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.23,000/- சம்பளத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

வங்கியில் வேலை

வங்கியில் வேலை

பரோடா வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க நாளை மறுநாளுக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க விவரங்களை காண்க.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாங்க் ஆப் பரோடா  ஒப்பந்த அடிப்படையில் காலியாக பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    Financial literacy counseling , Chairperson of the Committee , Banker , ஆகிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட கீழ்காணும் விண்ணப்பத் காரர்களிடம் இருந்து வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



















    வங்கியின்பெயர்பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda)
    வேலையின் பெயர்Financial Literacy and Credit Counsellor (FLCC),Chairperson of the Committee , Banker
    விண்ணப்பிக்க கடைசி தேதி30.08.2022
    விண்ணப்பிக்கும் முறைதபால் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    வயது :

    அதிகபட்ச வயது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியம் அவசியம்.

    கல்வித் தகுதி :

    விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவன்/அவள் உள்ளூர் மொழியை நன்கு அறிந்தவராகவும், மற்றும் கணினி அறிவில் திறமை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    தேவையான அனுபவம் : 

    விண்ணப்பதாரர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி/RRB/தனியார் வங்கியில் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் கொண்ட முன்னாள் வங்கியாளராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 05 வருடங்கள் வங்கியியல்/தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள், NBFCகள்/FIகள் அல்லது வணிக நிருபர்/BC-ஒருங்கிணைப்பாளர் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் அல்லது முன்னாள் RSETI இயக்குனர்/ஆசிரியர் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம்.

    பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2022 சம்பளம் : 

    ரூ.23, 000/- சம்பளமாக வழங்கப்படும்.

    BOB தேர்வு செயல்முறை 2022 : 

    நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பரோடா வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • BOB இணையதளத்தின் அதிகாரப்பூர்வ https://www.bankofbaroda.in/ தளத்திற்குச் செல்லவும்.

    • முகப்புப் பக்கத்தில் “Careers” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

    • அந்தப் பக்கத்தில் அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.இல்லையனில் கீழே அறிவிப்பின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க பயன்படுத்திக் கொள்ளவும்.

    • அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.

    • விண்ணப்ப படிவத்தை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :








    Bank of Baroda,

    Regional Office-UDUPI-II

    2nd floor, Shamili, Inn, Ambalapady,

    Udupi – 576 103.

    விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பினை படிக்க மற்றும் விண்ணப்ப படிவம் பெற

    APPOINTMENT OF FINANCIAL LITERACY COUNSELLORS ON CONTRACT BASIS

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/appointment-of-financial-literacy-counsellor-30-16.pdf

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/application-form-flcc-30-16.pdf

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/general-details-flcc-30-16.pdf

     

    விண்ணப்பிக்க 30ம் தேதிக்குள் முடியவுள்ள காலியிடங்களுக்களுக்கான அறிவிப்பு விவரம்

    https://www.bankofbaroda.in/career/current-opportunities/advertisement-for-engagement-of-retired-government-officials-as-panel-member

    இதிலும் சென்று அறிவிப்பினை க்ளிக் செய்து படித்த பின்னர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி