ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

TN Job alert : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூர் வாசிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு இப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
வட்டார ஒருங்கிணைப்பாளர்9

பணி வட்டாரங்கள்:

அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஆகிய வட்டாரங்களில் இடம்பெற்றுள்ளன.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பு கணினி அறிவியல் இருத்தல் வேண்டும்.

Also Read : மாதம் ரூ.50,000 சம்பளம் : தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனைத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://madurai.nic.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.

First published:

Tags: Jobs, Madurai, Tamil Nadu Government Jobs