HOME»NEWS»EMPLOYMENT»big vacancy in indian railways for engineering and diploma candidates vin ghta
இன்ஜினியரிங் மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கு இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு..
அதிகமான ஊழியர்களை கொண்டிருக்கும் உலகின் பெரிய துறைகளில் இந்திய ரயில்வே 9வது இடத்தை பெற்றுள்ளது. ரயில்வேயில் ஆட்களை சேர்க்கும் பொறுப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் நிர்வகிக்கிறது.
இந்திய ரயில்வே (Indian Railways) துறையானது உலகில் உள்ள ரயில்வே துறைகளில் 4வது பெரிய நெட்வொர்க்காக உள்ளது. மேலும் 15 லட்சத்திற்கும் மேலான ஊழியர்களை கொண்டு திறம்பட செயலாற்றி வருகின்றது. அதிகமான ஊழியர்களை கொண்டிருக்கும் உலகின் பெரிய துறைகளில் இந்திய ரயில்வே 9-வது இடத்தை பெற்றுள்ளது. ரயில்வேயில் ஆட்களை சேர்க்கும் பொறுப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் நிர்வகிக்கிறது.
ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் என்ற பெயர் இதற்கு முன்பு ரயில்வே சேவை ஆணையம் என அழைக்கப்பட்டது. ஆனால் 1985ம் ஆண்டு அதன் பெயர் ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் (Railway Recruitment Board) என பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்தியன் ரயில்வேயில் (Indian Railways) வேலை தேடும் நபர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது, ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் இப்போது செய்யப்படுகின்றன.
ஆர்வமுள்ள நபர்கள் இந்தியன் ரயில்வேயின் (Indian Railways) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://rwf.indianrailways.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப இங்கே உங்களுக்காக ஸ்டேப்-பை-ஸ்டெப்பாக விளக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டம் அல்லது டிப்ளோமா (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பெற்றவர்கள் இந்த பதவிகளில் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வே டிப்பார்ட்மென்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் கல்வித் தகுதி (Education Qualification) தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம். தகுதி தொடர்பான முழுமையான விவரங்கள் ரயில்வே டிப்பார்ட்மென்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
2- பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) - 60 பதவிகள்
எப்படி விண்ணப்பிப்பது (How to apply):
நேஷனல் அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டல் (National Apprenticeship Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 20 ஜனவரி 2021 ஆகும். இதற்காக, தேர்வர்கள் எந்தவொரு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த பதவிகளுக்கு தேர்வர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இருக்காது. பொறியியல் டிப்ளோமா / பட்டப்படிப்புகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (marks obtained in Engineering diploma/Degree exams). ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தேர்வர்கள் தேர்வு செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இந்த ரயில்வே துறையில் வேலை கிடைத்தால் பல எண்ணற்ற வசதிகள்/வாய்ப்புகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கும் உதாரணமாக ரயில்வே தனியாக, பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை கொண்டுள்ளது. இது ரயில்வே ஊழியர்களின் மகன் அல்லது மகள் சிறந்த கல்வியை பெற உதவி புரிகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ரயில்வேயில் பணிபுரிவது, நல்ல ஊதியம் கிடைக்க கூடிய தொழில் விருப்பமாகும். எனவே அரசு வேலைகளுக்கு ஆசைப்படுபவர்கள் ரயில்வே வேலைகளுக்கு தயாராகுங்கள்.