திருச்சி BHEL நிறுவனத்தில் 71 பேருக்கு வேலைவாய்ப்பு!

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 20-1-2019 அன்று நடைபெறும்.

news18
Updated: December 11, 2018, 10:13 PM IST
திருச்சி BHEL நிறுவனத்தில் 71 பேருக்கு வேலைவாய்ப்பு!
பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
news18
Updated: December 11, 2018, 10:13 PM IST
திருச்சி பெல் நிறுவனத்தில் வெல்டர், ஃபிட்டர், மெஷினிஸ்ட் பணிகளுக்கு 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் வெல்டர் பணிக்கு 26 இடங்களும், ஃபிட்டர் பணிக்கு 38 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-11-2018 நிலவரப்படி 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும், சம்பந்தப்பட்ட பணி பிரிவுகளில் என்.டி.சி. அல்லது என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 20-1-2019 அன்று நடைபெறும்.

மாத ஊதியம்: ரூ.34,300 (அனைத்துப் படிகளும் உள்பட)

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 20. கட்டணம் செலுத்தவும், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும் கடைசி தேதி டிசம்பர் 22.

மேலும் விவரங்களுக்கு www.bheltry.co.in, https://www.bheltry.co.in/careers/main_advt.jsp#emol ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.
Loading...
Also watch

First published: December 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்