ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஒப்பந்த அடிப்படையில் பெல் நிறுவனத்தில் பணி : 50,000க்கும் மேல் சம்பளம்

ஒப்பந்த அடிப்படையில் பெல் நிறுவனத்தில் பணி : 50,000க்கும் மேல் சம்பளம்

காட்சி படம்

காட்சி படம்

Electronics, Mechanical, Civil ஆகிய பாடப்பிரிவில் பல்கலைக் கழக மானியக் குழு/ AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் திட்ட பொறியாளர் மற்றும் பயிற்சி பொறியாளர்  பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  காலியிடங்கள்: 

  திட்ட பொறியாளர்/ அலுவலர் (Project

  Engineer/Officer) - 17

  பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) - 38

  திட்ட அலுவலர் பதவிக்கு MBA/MSW/PGHRM போன்ற முதுநிலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   

  இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. திட்ட அலுவலர் பணிக்கான பணியாணை 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். அதே போன்று, பயிற்சி பொறியாளர்  பணியாணை 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

  முக்கியமான நாட்கள்: தற்போது, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.06.2022  

  வயது வரம்பு:  திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.05.2022 அன்று  32 வயதுக்கு கீழும், பயிற்சி பொறியாளர் பதவிக்கு 28 வயதுக்கு கீழும் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  கல்வித்தகுதி: Electronics, Mechanical, Civil ஆகிய பாடப்பிரிவில் பல்கலைக் கழக மானியக் குழு/ AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  முன் அனுபவம்: பயிற்சி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தொடர்புடைய துறைகளில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். திட்ட அலுவலர் பதவிக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபம் இருக்க வேண்டும்.

  விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், https://forms.gle/a6Cjoh6XtbB7yTHN8 என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

  இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், டிஜிட்டல் கையொப்பம், பி.இ., பி.டெக் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பணி அனுபவ  சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம்  செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.

  இந்திய அரசின் இடஓதுக்கீட்டிற்கான விதிகள் இப்பணியிடங்களுக்கு பொருந்தும். எனவே, தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேர்வர்கள் தங்களுக்கான சலுகையைப் பெறலாம்.

  விண்ணப்பக் கட்டணம்: திட்ட பொறியாளர்/ அலுவலர் பதவிக்கு ரூ.472 விண்ணப்பிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  பயிற்சி பொறியாளர் பதவிவக்கு  ரூ. 177 விண்ணப்பிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.  

  வலைதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

  Recruitment Notification

  Published by:Salanraj R
  First published:

  Tags: BHEL, Jobs