BHEL-ல் மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

வேலைவாய்ப்பு

பாரட் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் 11 பகுதிநேர மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு எம்.பி.பி.எஸ், டிப்ளோமா, டி.என்.பி, எம்.எஸ், எம்.டி, எம்.சி.எச். படிப்பு முடித்த தகுதியானவர்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) பகுதிநேர மருத்துவ ஆலோசகர்கள் - PTMC (ஸ்பெஷலிஸ்ட்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 15 ஆகும்.

பாரட் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் 11 பகுதிநேர மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு எம்.பி.பி.எஸ், டிப்ளோமா, டி.என்.பி, எம்.எஸ், எம்.டி, எம்.சி.எச். படிப்பு முடித்த தகுதியானவர்கள் 04.05.2021 முதல் 15.05.2021 வரை ஆஃப்லைன் (தபால் அல்லது மின்னஞ்சல் மூலம்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்களின் விவரங்கள்:

பி.டி.எம்.சி நிபுணர் (தோல் நோய்) (PTMC Specialist (Dermatology)) - 1 இடம்
டயாபெட்டாலஜி (Diabetology) - 1 இடம்
பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் (Gynaecology & obstetrics) - 1 இடம்
கண் மருத்துவம் (Ophthalmology) - 1 இடம்
சிறப்பு எலும்பியல் (Specialist Orthopaedics) - 1 இடம்
சிறப்பு குழந்தை மருத்துவம் (Specialist Paediatrics) - 2 இடம்
சிறப்பு கதிரியக்கவியல் (Specialist Radiology) - 1 இடம்
பி.டி.எம்.சி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஆன்காலஜி (PTMC Super Specialist Oncology) - 2 இடம்
பி.டி.எம்.சி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் சிறுநீரகம் (PTMC Super Specialist Urology) - 1 இடம்

BHEL மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கான கல்வித்தகுதி:

பி.டி.எம்.சி நிபுணர் (தோல் நோய்) - டிப்ளோமா / பட்டம்

டயாபெட்டாலஜி- டிப்ளோமா / பட்டப்படிப்பு

பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் - டிப்ளோமா / பட்டம்

கண் மருத்துவம் - டிப்ளோமா / பட்டப்படிப்பு

சிறப்பு எலும்பியல் - டிப்ளோமா / பட்டப்படிப்பு

சிறப்பு குழந்தை மருத்துவம் - டிப்ளோமா / பட்டப்படிப்பு

சிறப்பு கதிரியக்கவியல் - டிப்ளோமா / பட்டப்படிப்பு

பி.டி.எம்.சி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஆன்காலஜி - எம்.சி.எச் / டிப்ளோமா / டி.என்.பி.

பி.டி.எம்.சி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் சிறுநீரகம் - எம்.சி.எச் சிறுநீரகம்

Also read... RITES Apprentice Recruitment 2021 : மத்திய RITES நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

BHEL மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

* அதிகாரப்பூர்வ BHEL வலைத்தளமான www.bhel.com க்குச் செல்லவும்.

* அதில் “ஆட்சேர்ப்பு / தொழில் / விளம்பர மெனு” (Recruitment/ Career/ Advertisement menu) இணைப்பைக் கண்டுபிடித்து அதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* பகுதி நேர மருத்துவ ஆலோசகர் வேலைகளின் அறிவிப்பைத் தேடி, அதைக் கிளிக் செய்ய வேண்டும்.

*அதேபோல, அந்த இணைப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.

* அதில் கொடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புகளை கவனமாகப் படித்து, உங்கள் தகுதிகளைச் சரிபார்க்கவும்.

* இதையடுத்து உத்தியோகபூர்வ விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான பிற ஆவணங்களின் பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

* விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.

* பிறகு தேவையான அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து அதில் உங்கள் சுய கையொப்பத்தை போட வேண்டும்.

* பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

* இறுதியாக உங்கள் விண்ணப்பம் மற்றும் நகலெடுக்கப்பட்டு கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் “பி.டி.எம்.சி (ஸ்பெஷலிஸ்ட்ஸ்) - 03/2021” என்று குறிப்பிட்டு recruit@bhel.in மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

* அல்லது, விண்ணப்பப் படிவத்தை 15.05.2021 க்கு முன்னர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: