பெல் நிறுவனத்தில் 320 அப்பரன்டிஸ் காலி பணியிடங்கள்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள பெல் நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 320 அப்பரன்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.

news18
Updated: October 25, 2018, 8:56 PM IST
பெல் நிறுவனத்தில் 320 அப்பரன்டிஸ் காலி பணியிடங்கள்!
பெல் நிறுவனத்தில் அப்பரன்டிஸ் பயிற்சி
news18
Updated: October 25, 2018, 8:56 PM IST
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். சுருக்கமாக பெல் (பிஹெச்இஎல்) எனப்படும் இந்நிறுவனத்துக்கு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன.

320 அப்பரன்டிஸ் பணியிடங்கள்: கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள பெல் நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 320 அப்பரன்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31.

வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிக்க விருப்புவோர் 2018 ஆகஸ்ட் 1 நிலவரப்படி 18- 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எல்க்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிக்கேஷன், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ், மெக்கட்டரானிக்ஸ், சிவில் ஆகிய இன்ஜினிரியங் பிரிவுகளில் 3 வருட டிப்ளமா படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: தகுதிவாய்ந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.bheledn.com என்ற வலைதளத்தை பார்க்கவும் அல்லது 080-26998500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

Also See

First published: October 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...