BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள்!

ஹரித்துவார் நகரிலுள்ள பெல் நிறுவனத்தில் பட்டதாரி, டெக்னீசியன் பிரிவில் 250 அப்ரென்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பட்டதாரி பிரிவுக்கு 158 இடங்களும், டெக்னீசியன் பிரிவுக்கு 92 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

news18
Updated: November 4, 2018, 5:06 PM IST
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள்!
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பயிற்சி
news18
Updated: November 4, 2018, 5:06 PM IST
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL).  இந்நிறுவனத்துக்கு தமிழகம், கர்நாடகா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன.

 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள்: உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவார் நகரிலுள்ள பெல் நிறுவனத்தில் பட்டதாரி, டெக்னீசியன் பிரிவில் 250 அப்ரென்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பட்டதாரி பிரிவுக்கு 158 இடங்களும், டெக்னீசியன் பிரிவுக்கு 92 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 7.

வயது வரம்பு: இதற்கு விண்ணப்பிக்க விருப்புவோர் 2019 பிப்ரவரி 1 நிலவரப்படி 18 - 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக்., என்ஜினியரிங் பட்டப்படிப்பு (பட்டதாரி பிரிவு) மற்றும் டிப்ளமா என்ஜினியரிங் (டெக்னீசியன் பிரிவு) முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

கடைசி தேதி: தகுதி வாய்ந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நகல் விண்ணப்பத்தை ஹரித்துவார் பெல் நிறுவன முகவரிக்கு வரும் 14-ம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://careers.bhelhwr.co.in என்ற வலைதளத்தை பார்க்கவும் அல்லது 01334-285835, 285277, 281673 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும்.

Also watch

First published: November 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...