ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Tamil Nadu FiberNet Corporation-ல் வேலை - உடனடியாக விண்ணப்பியுங்கள்

Tamil Nadu FiberNet Corporation-ல் வேலை - உடனடியாக விண்ணப்பியுங்கள்

Tamil Nadu FiberNet Corporation | அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, tanfinet.tn.gov.in  இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamil Nadu FiberNet Corporation | அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, tanfinet.tn.gov.in  இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamil Nadu FiberNet Corporation | அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, tanfinet.tn.gov.in  இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் கன்சல்டன்ட்  மற்றும் இணை கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியுடையவர்கள் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்ப படிவங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்:

கன்சல்டன்ட் 

 பணியிடங்கள்எண்ணிக்கை
Noc Manager1
Routing Manager1
Infrastructure Manager1
GIS Manager1

கல்வித் தகுதி:

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல் ஆகிய பிரிவில் பி.இ,பி.டெக்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொலைதொடர்பு துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் வரை பனி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

                                    இணை கன்சல்டன்ட்: 

Noc and Server1
OFC & Right of Way(RoW)1
Network Security1
BSS and Helpdesk1
Operation Support System1
ELectrical and Construction1

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல் ஆகிய பிரிவில் பி.இ,பி.டெக்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொலைதொடர்பு துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை பனி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.  

பணியின் ஒப்பந்தம் காலம் 18 மாதம். அதன்பின், விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையில் ஒப்பந்த காலம் அதன்பின் புதுப்பிக்கப்படலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?   

பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.04.2022 மாலை 5.45 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

The Managing Director,

Tamil Nadu FibreNet Corporation Limited,

Door.No.807, 5th floor,

P.T.Lee Chengalvaraya Naicker Trust,

Anna Salai, Chennai- 600 002

தெளிவுரை வேண்டுவோர்:

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, tanfinet.tn.gov.in  இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால்,044 - 28888230 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.tanfinet@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு இந்த   இணைப்பை கிளிக் செய்யவும்.

பாரத்நெட் திட்டம்:  மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான பாரத்நெட் திட்டம் மூலம், Universal Service Obligation Fund, தொலைதொடர்பு துறை மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் நிதியுதவியடன் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இணைய இணைப்பு வழங்கபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கண்ணாடி இழை வலைபின்னல் மூலம் 1 Gbps அளவிலான மேம்படக்கூடிய அலைவரிசை வழங்கப்படும்.

இத்திட்டம் வட்டாரம் முதல் கிராம பஞ்சாயத்துகள் வரை கண்ணாடி இழை வலையமைப்பு மூலம் இணைய இணைப்பு வழங்கவும், மாநிலம் முழுவதும் இ-சேவை மற்றும் மின்னனு பயன்பாடுகளை வழங்க அரசுக்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வர் தமிழ்நாடு சட்டமன்ற விதி 110-ன் கீழ், பாரத்நெட் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும், மற்றும் அதற்காக "தமிழ்நாடு ஃபைபர்நெட்" (TANFINET) என்ற பெயரில், சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் கையாளப்பட்டு வந்த பாரத்நெட் திட்டம் தற்போது புதியதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.டும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் கையாளப்பட்டு வந்த பாரத்நெட் திட்டம் தற்போது புதியதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

Published by:Salanraj R
First published:

Tags: Government jobs, Tamil Nadu govt