Home /News /employment /

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு காலியிடம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு காலியிடம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில்  Research Associate பணி

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Research Associate பணி

Bharathiar University Recruitment 2022 | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் உங்கள் பயோ டேட்டாவை 30.06.2022ம் தேதிக்குள் shibu@buc.edu.in மற்றும் shibu.m.a@gmail.com ஆகிய மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Research Associate பணிக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயோடெக்னாலஜி துறையில் இந்த பணி காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    தற்போது சென்று கொண்டிருக்கும் “Hypoxia inducible stem cell exosomal chaperons and miRNA as therapeutic strategy for healthy cardiac aging” எனும் திட்டத்தில் (project ) காலியிடம் உள்ளது. இதற்கு ஒருவர் மட்டும் தேவை.

    Biotechnology/ Life Science ஆகியவற்றில் முதுகலை மற்றும் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்கும் நபர்கள் Ph.D., in Biotechnology/ Life Science, Working experience in animal cell culture, primary culture
    and molecular techniques with relevant track records தகுதியாக கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ரூ.20,000 மாதம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் உங்கள் பயோ டேட்டாவை 30.06.2022ம் தேதிக்குள் shibu@buc.edu.in மற்றும் shibu.m.a@gmail.com ஆகிய மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். hard copy or print முறையில் அனுப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேர்காணலின் தேதி மற்றும் நேரம் :

    பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    நேர்காணல் நடைபெறும் நேரம் மற்றும் இடம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். அழைக்கப்படும் போது, ​​விண்ணப்பதாரர்கள் CV நகலுடன் நேர்காணலில் வரவேண்டும்.

    அசல் சான்றிதழ்கள், தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களும் மெட்ரிகுலேஷன் முதல் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் நகல் எடுத்து வர வேண்டும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை பெற

    https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2022/biotech/ra_biotech_notification.pdf

    இந்த பக்கத்தில் பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி