பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாகவுள்ள 147 பணியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கொச்சி கிளையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 147 இடங்கள் காலியாக உள்ளன.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாகவுள்ள 147 பணியிடங்கள்!
பாரத் பெட்ரோலியம்
  • News18
  • Last Updated: November 24, 2018, 7:42 PM IST
  • Share this:
நாட்டிலுள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் முக்கியமானது பாரத் பெட்ரோலியம் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கொச்சி கிளையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 147 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 26.

எந்தெந்தப் பிரிவுகள்: ஜெனரல் ஒர்க்மேன் - கெமிக்கல் – 63, மெக்கானிக்கல் – 32, இன்ஸ்ட்ருமெண்டேஷன் - 17, கெமிஸ்ட் ட்ரெய்னி – 13, ஆபரேடர் ட்ரெய்னி – 12

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-10-2018 நிலவரப்படி 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: ஜெனரல் ஒர்க்மேன் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் டிப்ளமா என்ஜினியரிங் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கெமிஸ்ட் ட்ரெய்னி பணிக்கு எம்.எஸ்.சி. (வேதியியல்) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பகளை அனுப்பலாம். இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 26. தேர்வு முறை உள்ளிட்ட பிற விவரங்களை தெரிந்துகொள்ள www.bharatpetroleum.com என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Also watch
First published: November 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading