சென்னையிலுள்ள BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னையிலுள்ள BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: December 6, 2018, 9:20 PM IST
  • Share this:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சென்னையிலுள்ள இந்த நிறுவனத்தின் கிளையில் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பிரிவு வாரியான காலியிடம்: எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 8, மெக்கானிக்கல் பிரிவில் 4, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 2, எலக்ட்ரிக்கல் பிரிவில் 1, சிவில் பிரிவில் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 25. எனினும், ஓபிசி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 12. மேலும் ற விவரங்களுக்கு http://bel-india.in/Documentviews.aspx?fileName=CE-Web-ad-English-201118.pdf, http://bel-india.in/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch
First published: December 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்