அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வெளியிட்டு உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பல பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக BECIL அறிவித்து உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 378 காலி பணியிடங்களை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிரப்ப உள்ளது. விண்ணப்பதாரர்கள் BECIL-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான becil.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் ஏப்ரல் 25 கடைசி நாள் ஆகும். காலியாக உள்ள 200 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 178 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க BECIL அழைப்பு விடுத்துள்ளது.
BECIL ஆட்சேர்ப்பு 2022: தகுதி அளவுகோல்கள் :
வயது வரம்பு:
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று BECIL அறிவித்து உள்ளது. அதே நேரம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு வயது வரம்பு இல்லை என்று BECIL குறிப்பிட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதியின் படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Graduate) முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
* பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று Careers பிரிவை ஓபன் செய்யவும்
* இப்போது ‘Registration Form (Online) என்பதை கிளிக் செய்து புதிய யூஸராக பதிவு செய்யுங்கள்
* அடுத்து தேவையான விவரங்களை என்டர் செய்து, தேவையான ஆவணங்களைப் அப்லோட் செய்வதன் மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். விண்ணப்பப் படிவத்தின் கடைசி பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இ-மெயில் ஐடி-க்கு உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்
* விண்ணப்ப கட்டணத்தை (application fee ) செலுத்தும் படியை முடிக்கவும்
* எதிர்கால தேவைக்காக விண்ணப்ப படிவத்தை சேவ் செய்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750. SC, ST, EWS மற்றும் PH பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும், விண்ணப்பதாரர்கள் கூடுதல் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரயில்வேயில் வேலை - 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேர்வு செயல்முறை:
அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வு அடிப்படையில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வானது அப்ஜெக்ட்டிவ் மற்றும் விளக்க கேள்விகளை கொண்டிருக்கும். மேலும் பொது விழிப்புணர்வு (நடப்பு விவகாரங்கள்), ஆங்கில இலக்கணம் மற்றும் எழுத்து போன்ற பாடங்களை உள்ளடக்கியது.
கம்ப்யூட்டர் அறிவு தேர்வில் MS Word, Excel மற்றும் PowerPoint பற்றிய விண்ணப்பதாரர்களின் வேலை அறிவை சோதிக்கப்படும். கூடுதலாக 2 பதவிகளுக்கும், விண்ணப்பதாரர்கள் 2 கட்டங்களாக ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இறுதி தேர்வு தனிப்பட்ட தொடர்பு / கலந்துரையாடல் அடிப்படையில் இருக்கும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு டெல்லி அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களின்படி சம்பளம் வழங்கப்படும். அதேசமயம், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிக்கு தேர்வானால் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டதாரிகளுக்கான டெல்லி அரசின் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களின்படி சம்பளம் வழங்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.