முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SBI வங்கியில் அதிகாரி வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI வங்கியில் அதிகாரி வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

SBI வங்கி வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI)  வங்கி சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படுகின்றன.

வேலைவாய்ப்பு:

நிறுவனம்: State bank of India

பணி:  Circle Based Officers

காலிப்பணியிடங்கள் : 1226

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிக வங்கி அல்லது கிராமப்புற வங்கிகளில் 2 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்றபடி உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 30 வயது

 விண்ணப்பிக்கும் முறை: SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக https://sbi.co.in/web/careers என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-12-2021

மேலும் விவரங்களுக்கு bank.sbi/documents என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

First published:

Tags: Banking jobs, Job search, Job vacancies, Job Vacancy, SBI Bank, Sbi portal