Home /News /employment /

பாங் ஆப் இந்தியாவில் 696 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

பாங் ஆப் இந்தியாவில் 696 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

பேங்க் ஆப் இந்தியா வங்கி

பேங்க் ஆப் இந்தியா வங்கி

விண்ணப்பதாரர்கள் www.bankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    பொருளாதார நிபுணர், கடன் மதிப்பீட்டு ஆய்வாளர், இடர் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாங் ஆப் இந்தியா வெளியிட்டள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.







































    பணி விபரம்  காலியிடம் 
    Economist2
    Statistification2
    Risk Manager2
    Credit Analyst53
    Credit Officers484
    Tech Appraisal9
    IT Officers- Data Centre42
    மொத்தம்594

    அதே போன்று, Manager IT, Senior Manager, Manager (Data Centre)- Cloud Virtualization ஆகிய பணியிடங்களுக்கு  ஒப்பந்த முறையில் 102 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.



    முக்கியமான நாட்கள்: இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. மே மாதம் 10ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    எழுத்துத் தேர்வு முறை:



















    பாடப்பிரிவுஅதிகபட்ச மதிப்பெண்கள்
    பொது ஆங்கிலம்50
    பொது அறிவு100
    வங்கித் துறை தொடர்புடைய கேள்விகள்25

    எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து, நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

    வயது வரம்பு:  பணியிடங்களுக்கு ஏற்ப அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.

    விண்ணப்பிக் கட்டணம்: 

    விண்ணப்பதாரர்கள் www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    SBI: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணி : 27 லட்ச ரூபாய் வரை சம்பளம்

    இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.150 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண், சுயவிபரம் (Resume) நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், கையெழுத்து, மின்னஞ்சல் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

    மேலும், விவரங்களுக்கு: 

    ஆட்சேர்ப்பு அறிவிப்பு

    தகுதிகள்

    ஒப்பந்த பணிகளுக்கான தகுதிகள்
    Published by:Salanraj R
    First published:

    Tags: Banking jobs, Jobs

    அடுத்த செய்தி