பரோடா வங்கியில் 600 காலி பணியிடங்கள்

news18
Updated: June 20, 2018, 7:09 PM IST
பரோடா வங்கியில் 600 காலி பணியிடங்கள்
புரோபேஷனரி அதிகாரியாக வாய்ப்பு
news18
Updated: June 20, 2018, 7:09 PM IST
பரோடா வங்கி புரோபேஷனரி அதிகாரிகளாக 600 பேரை பணியமர்த்தவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:


  • புரோபேஷனரி அதிகாரிகளுக்கான மொத்தப் பணியிடங்கள் – 600

  • இதில் பொதுப் பிரிவினருக்கு 303 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 162 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 90 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 45 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 55 சதவீதத்துடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 20 முதல் 28 வரை (எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு).
  • Loading...
  • விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி,மாற்றுத் திறனாளிகளுக்கு - ரூ. 100, பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு - ரூ.600. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

  • தேர்வு செய்யும் முறை: தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேரடி கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • தேர்வு நடைபெறும் தேதி: ஆன்லைன் தேர்வு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 17 ஊர்களில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 2-ஆம் தேதி.


மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க்கை  கிளிக் செய்யவும்.

https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf
First published: June 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...