ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பரோடா வங்கியில் வேலை: வேளாண் விற்பனை அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்

பரோடா வங்கியில் வேலை: வேளாண் விற்பனை அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்

job interview

job interview

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி:  26.04.2022 இரவு 11:59 மணி வரை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பரோடா வங்கி (Bank Of  Baroda) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  பணியிடங்கள்:

  பாட்னா மண்டலம்  - 4

  சென்னை மண்டலம் -  3

  மங்களூரு மண்டலம் - 2

  புது டெல்லி - 1

  ராஜ்கோட் -  2

  சண்டிகர் -  4

  எர்ணாகுளம் -  2

  கொல்கத்தா -  3

  மீரட் -  3

  அகமதாபாத் -  2

  ஊதியம்: ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை

  வயது: 01.01.2022 அன்று 25 வயதை கடந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.  

  கல்வித்தகுதி:  விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, பால், மீன்வளம் அறிவியல், வேளாண்மை கூட்டுறவு, உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், வேளாண் வர்த்தகம் போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு bank of baroda

  ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: s 26.04.2022 இரவு 11:59 மணி வரை.

  உடனடியாக விண்ணப்பியுங்கள்: கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

  மேலும், விவரங்களுக்கு இந்த  இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

  உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் - யுஜிசி பரிந்துரை

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job