Home /News /employment /

டிகிரி முடித்தவர்களுக்கு பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இளநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு உள்ளது. இதன் விபரம் பின்வருமாறு-

    பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டத்துடன் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    உதவி துணைத் தலைவர் (Assistant Vice President)
    உதவி துணைத் தலைவர் பொறுப்புக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்போர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    முதுநிலை மேலாளர் (Senior Manager)
    இந்த பொறுப்புக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிப்போர் 25-37 வயதுடையவராக இருக்க வேண்டும்.

    மேலாளர் (Manager)
    3 மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வயது வரம் 23-35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - 10, 12-ம் வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு வேலை... அப்ளை செய்ய நாளை மறுதினமே கடைசி நாள்

    கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    அனுபவம் : 3 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை

    முன்னுரிமை : பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ. மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தேர்வாகும் முறை : நேர்முகத் தேர்வு

    இதையும் படிங்க - கால அவகாசம் நீட்டிப்பு.. TNPSC Group 2 தேர்வுக்கு தயாராவோர் அவசியம் படிக்க...

    விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.in/career.htm என்ற இணைய தள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம் : SC, ST, மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு ரூ. 100
    மற்ற பிரிவினருக்கு ரூ. 600 - ஆன்லைனில் செலுத்தலாம்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.03.2022
    Published by:Musthak
    First published:

    Tags: Bank of Baroda, Banking jobs

    அடுத்த செய்தி