வங்கியில் வேலையைப் பெற வேண்டும் என்று ஆர்வம் காட்டுபவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் (Assistant) காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகபட்சம் மாதம் ரூ. 55 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் இந்த பணியில் சேர்வதற்கு டிகிரி மட்டுமே கல்வித் தகுதியாகும்.
இதனால் வங்கி வேலையை எதிர்பார்த்திருப்பவர்கள் இந்த சூப்பர் சான்ஸை மிஸ் செய்ய வேண்டாம். மொத்தம் 950 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான சம்பளம் மாதம் குறைந்தது ரூ. 20,700-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 55,700 வரையில் கிடைக்கும்.
வயது வரம்பை பொறுத்தளவில் 01.02.2022 தேதியின்படி குறைந்தது 20 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்குள் விண்ணப்பிப்போர் இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க -
TNPSC குருப் 2, 2A தேர்வு தேதியை மாற்றுங்க... வலுக்கும் கோரிக்கை
ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வை நடத்தி உதவியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை ரிசர்வ் வங்கி நடத்தவுள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மை என 2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலையில் வெற்றிபெறுபவர்கள் அடுத்ததாக முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பவர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளமான www.rbi.org.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 8,2022 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
டெல்லி மெட்ரோவில் காலியிடம்; என்ன தகுதி? என்ன வேலை? விண்ணப்பிப்பது எப்படி?
முதல்நிலைத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
பணியின் பெயர் |
Assistant - உதவியாளர் |
காலியிடங்கள் |
950 |
கல்வி தகுதி |
குறைந்தது 50% மதிப்பெண்களுடன் டிகிரி பட்டம் |
ஊதியம் |
ரூ. 20,700 - ரூ. 55,700 |
வயது வரம்பு |
01.02.2022 தேதியின்படி வயது 20 – 28 இருக்க வேண்டும் |
தேர்வு முறை |
ஆன்லைன் – முதல்நிலை, முதன்மை என 2 தேர்வுகள். முதல்நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். |
விண்ணப்பிக்கும் இணையதளம் |
www.rbi.org.in |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
08.03.2022 |
தேர்வு நடைபெறும் இடங்கள் |
சென்னை, மதுரை, கோவை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.