தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : தேசிய வீட்டுவசதி வங்கி ( National Housing bank)
(01) பணி : உதவி மேலாளர் ( Assistant manager )
காலிப்பணியிடங்கள் : 14
வயது வரம்பு : 21 -30 -க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ஏதாவது ஒருதுறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் இருத்தல் நல்லது.
(02) பணி : துணை மேலாளர் ( Deputy Manager)
காலிப்பணியிடங்கள் : 02
வயது வரம்பு : 23- 32-க்குள் இருத்தல் வேண்டும்
தகுதி: எதாவது ஒருதுறையில் பட்டம், MBA படித்து இருத்தல் நல்லது. இந்தியாவில் உள்ள வங்கிகள் அல்லது நிதி சார்ந்த துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(03) பணி: மண்டல மேலாளர் ( Regional Manager)
காலிப்பணியிடங்கள் : 01
வயது வரம்பு – 30 – 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
தகுதி: எதாவது ஒரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்தின் சான்றிதழ், சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம், சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrb.rg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/nhbrosmoct21/ இந்த லிங்கில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
அறிவிப்பு வெளியான நாள்: 01-12-2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 -12-2021
மேலும் விவரங்களுக்கு : https://nhb.org.in/en/oppurtunities_nhb/recruitment-of-officers-in-various-scales-2021/ என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank Recruitment, Bank Vacancy, Job