நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தாக்கத்தை மேம்படுத்துவத்ற்கான அடல் கண்டுபிடிப்பு இயக்கம் (Atal Innovation Mission) என்ற முதன்மை முயற்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில், அடல் டிங்கரிங் ஆய்வகம், அடல் அடல் தொழில் ஊக்குவிப்பு மையம் (Atal Incubation Centre (AIC) அடல் சமுதாய புத்தாக்க மையம் (Atal Community Innovation Centre (ACIC) ஆகிய மூன்று கட்டமைப்புகள் உள்ளன.
அரசு/தனியார் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. முப்பரிமான அச்சிடுதல் (3D Printing), இணைய தொடர்புகள் ( Internet of Things) , செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில் நுட்பம் ஆகிய 21ம் நூற்றாண்டின் சவால்களை மாணவர்கள் சுய கற்றல் மூலமாக கற்கவும், ஆராயவும், பரிசோதனை செய்யவும் இந்த ஆய்வங்கள் வழி வகை செய்கிறது. அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ், பள்ளிகளில் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது.
அடல் இன்குபேஷன் மையங்கள் நாட்டின் புதிதாக தொழில் நிறுவனங்கள் செழித்து வளர்வதற்கும், அதற்க்கான சூழலை உருவாக்கித் தருவதற்குமான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், பெருநிறுவனம், எம்எஸ்எம்இ உள்ளிட்ட நிறுனவங்கள்இதில் பங்களிப்பு செய்கின்றனர். இத்திட்டத்தின் கீழ், இன்குபேஷன் மையங்கள் அமைப்பதற்காக ரூ. 10 கோடி (5 ஆண்டுகளுக்கு) வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது. தற்போது, 68 மையங்கள் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.
அதேபோன்று, நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அடல் சமுதாய புத்தாக்க மையம் (Atal Community Innovation Centre (ACIC) செயல்பட்டு வருகிறது. சமுதாய மையங்கள் அமைப்பதற்காக ரூ. 2.5 கோடி (5 ஆண்டுகளுக்கு) வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது. தற்போது, 14 மையங்கள் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.
முன்னதாக,
விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரமேஸ்வரன் ஐயர், புத்தாக்கம் என்பது வளர்ச்சிக்கான ஈடு இணையற்ற உந்து சக்தியாக விளங்குவதோடு, சமூக தொழில்முனைவுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை ஏற்படுத்தி, இந்தியாவில் புத்தாக்க சூழலியலை உருவாக்கி, ஆதரவளிப்பது, இந்த இரண்டு திட்டங்களின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டம்; வெளியானது சூப்பர் அறிவிப்பு
அடல் தொழில் ஊக்குவிப்பு மையத்திற்கு விண்ணப்பிக்க https://aimapp2.aim.gov.in/aic2022/ என்ற மின் முகவரியையும், அடல் சமுதாய புத்தாக்க மையத்திற்கு https://acic.aim.gov.in/acic-application/ என்ற இணைப்பையும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.