ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

Madras University jobs : சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் நேரடி வகுப்புகள் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகள் இயங்குகின்றன. தற்போது இந்த துறைகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

துறைபணியிடம்
தமிழ்1
ஆங்கிலம்3
பொருளாதாரம்1
வரலாறு1
அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம்4
குற்றவியல்1
சைபர் தடவியல்1
வணிகம்6
கணிதம்1
உளவியல்4
கணினி அறிவியல்4
மேலாண்மை படிப்புகள்7
இசை3
பிரெஞ்சு4
இதழியல் & தொலைத்தொடர்பில்2
மானுடவியல்2
சமஸ்கிருதம்2
சைவ சித்தாந்தம்2
புவியியல்2
சமூகவியல்1
கிறிஸ்துவ படிப்பு2
மொத்தம்56

கல்வித்தகுதி:

அந்தந்த துறைக்கு ஏற்ற 55% சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முழு நேர Ph. D முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

தற்காலிக பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.30,000/- சம்பளமாக வழங்கப்படும்.

பணிக்காலம்:

ஒரு செமஸ்டர் விதம் 120 நாட்கள் பேராசிரியராக பணியாற்ற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

Also Read : பாடகரா நீங்கள்? இசைக் கருவி வாசிக்கத் தெரியுமா? ரயில்வேயில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் சென்னை பல்கலைக்கழக இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாளுக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://www.unom.ac.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar, University of

Madras, Chepauk, Chennai -600 005.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 09.12.2022.

First published:

Tags: Assistant Professor, Jobs, Madras University, Teaching