தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் செயல்படும் மீன்வள பொறியியல் கல்லூரியில் உள்ள பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஆய்வக நிபுணர் ஆகிய பதவிகளைத் தகுதியின் அடிப்படையில் ஆன்லைன் நேர்காணல் மூலம் நிரப்பப்படும். B.Tech/M.Tech படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் 6 மாதகாலம் பணி நியமனம் செய்யப்படுவர். உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடங்கள் | சம்பளம் | வயது |
ஆய்வுக் கூட நிபுணர் | 2 | ரூ.15,000 | அதிகபட்சம் 35 வயது |
உதவிப் பேராசிரியர் | 2 | நெட் இல்லாமல் ரூ.35,000நெட் தேர்ச்சி ரூ.40,000 | அதிகபட்சம் 35 வயது |
கல்வித்தகுதி:
உதவி பேராசிரியர் பணிக்கு M.Tech (Fish Process Engineering/Aquacultural Engineering)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுக் கூட நிபுணர் பணிக்கு B.Tech(Fish Engineering)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களுக்கு ஆன்லைனில் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய படிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : deancofe@tnfu.ac.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment news, Jobs, University