Home /News /employment /

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் உதவியாளர் , தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் உதவியாளர் , தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்

TNHRCE Recruitment 2022 : அறநிலைய நிறுவனங்கள், அரசுத்துறை , உள்ளாட்சி நிர்வாகம் , மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பணிநீக்கம் அல்லது விலக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயில்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்களாவர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

































    பதவியின் பெயர்காலியிட எண்ணிக்கைஊதிய விவரம்

    கல்வி மற்றும் இதர தகுதிகள் விவரம்

     
    உதவி சுயம்பாக (உள்துறை)02ரூ.10000-31500இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின் படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    இளநிலை உதவியாளர் (வெளித்துறை)01ரூ.18500-5860010ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்க்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    தட்டச்சர் (வெளித்துறை)01ரூ.18500-58600

    தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்க்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட Computer Application and Office
    Automation அல்லது அதற்க்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அரசு தொழில் நுட்ப தேர்வுகளில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலை , ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது தமிழில் கீழ்நிலை ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை )01ரூ.11600-36800தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    நிபந்தனைகள் :

    • விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    • விண்ணப்ப படிவத்தை https://hrce.tn.gov.in//hrcehome/index.php இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்று கொள்ளலாம்.

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உதவி ஆணையர் / செயல் அலுவலர் , அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அலுவலகம் , ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம் , நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு 21.01.2022 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்புதல் வேண்டும்.

    • அறநிறுவனங்கள், அரசுத்துறை , உள்ளாட்சி நிர்வாகம் , மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பணிநீக்கம் அல்லது விளக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயில்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்களாவர்.

    • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

    • பணிநியமனம் இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகும்.

    • இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி