முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! இன்றே விண்ணப்பியுங்கள்

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! இன்றே விண்ணப்பியுங்கள்

அறிவியல் அருங்காட்சியகம்

அறிவியல் அருங்காட்சியகம்

Central Govt job alert : மத்திய அரசின் அறிவியல் அருங்காட்சியகத்தில் கலை அறிஞர்க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சிலில் பிராந்திய பிரிவில் நுண்கலை மற்றும் வணிக கலை (Fine /Commercial arts ) பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு பெற்றவருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி மற்றும் முறையைப் பார்ப்போம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Artist ‘A’
காலிப்பணியிடம்1
வயதுஅதிகபட்சம் 35 வயது
சம்பளம்ரூ.19,900-63,200/- (நிலை -2)

கல்வித்தகுதி:

இப்பணிக்கு நுண்கலை மற்றும் வணிக கலை பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடம் படிப்பு என்றால் ஒரு வருடம் அனுபவம் தேவை. ஒரு வருடம் படிப்பு என்றால் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் சான்றிதழ் அடிப்படையில் தகுதியானவர்களுக்குத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://ncsm.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து விண்ணப்பத்தைத் தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்; தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யhttps://ncsm.gov.in/notice/carrers

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Project Coordinator, Regional Science Centre, Guwahati Guwahati, Jawaharnagar, Khanapara, Guwahati-781022.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022.

First published:

Tags: Central Government Jobs, Jobs