2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம் , கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மன நல மருத்துவம் , சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயது குறையாதவராகவும், 65 வயது பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்கள் ஆவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தினை கீழ்கணட முகவரியில் பெற்றுக்கொள்ளவும். அல்லது மாவட்ட இணையத்தளமான https://ariyalur.nic.in/notice/application-for-the-position-as-social-worker-member-of-the-juvenile-justice-board/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 25.11.2021 மாலை 5 மணிக்கு இவ்வலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம் , அரசு பால்துரை வளாகம் , அரியலூர் - 621 704. போன் : 04329 224221
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy