Ariyalur District Job Alerts : அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் (தமிழ்நாடு கிராமப்புற இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு (DDU-GKY) திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (Dec.23) அன்று நடைபெறுகிறது.
இடம் மற்றும் நேரம்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்; (காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ளது.
யார் கலந்து கொள்ளலாம்: 5-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண், பெண் (இருபாலரும்) கலந்து கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம்.
இதையும் வாசிக்க: 6,414 தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலியிடங்கள், ரூ.1 லட்சம் வரை சம்பளம் ... இன்றே விண்னப்பியுங்கள்
மேலும், இத்திருவிழாவில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் 20 க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு (RSETI), தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) கலந்து கொண்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை வழங்க உள்ளார்கள்.
இதையும் வாசிக்க: TNPSC Annual Planner 2023: குரூப் 1 தேர்வு உண்டு .... குரூப் IV அறிவிப்பில் மாற்றமில்லை
வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகம் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் தங்களது சுய விபர குறிப்பு (Bio –Data) ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur, Jobs, Tamil Nadu Government Jobs