Home /News /employment /

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Archaka Trainers: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வருகிற ஜூலை 15 ஆம் தேதிக்குள் மீனாக்ஷி அம்மன் கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2006 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக மதுரை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளித்து வந்த நிலையில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் சிவாச்சாரியார்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

    கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை திறக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியானது திறக்கப்பட்ட உள்ளது.

    அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியர்கள் நியமிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    இதையும் வாசிக்க:  14 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்

    அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "உரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும் உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வருகிற ஜூலை 15 ஆம் தேதிக்குள் மீனாக்ஷி அம்மன் கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்கயுஜிசி –நெட்: பாட வாரியான தேர்வு அட்டவணை வெளியானது

    மேலும்,கடந்த 2007ஆம் ஆண்டு இந்த அர்ச்சக பயிற்சி பள்ளியில் பயின்ற பிராமணர் இல்லா அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி