ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

NCS பள்ளியில் ஆசிரியர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

NCS பள்ளியில் ஆசிரியர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி

Navy Children School Recruitment : அரக்கோணத்தில் உள்ள கடற்படை சிறுவர்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வுக்கூட நிபுணர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரக்கோணத்தில் உள்ள NCS (Navy Children School) பள்ளியில் முதுகலைப் பட்டதாரி,தொடக்கக்கல்வி ஆசிரியர், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆய்வுக்கூட நிபுணர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், அறிவியல் ,ஹிந்தி போன்ற பாடங்களுக்குத் தொடக்கக்கல்வி பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஆசிரியர் பணி தவிர, ஆய்வுக்கூட நிபுணர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

ஆசிரியர் பணி:

பதவியின் பெயர்பாடங்கள்வயது
Post Graduate Teacherஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல்23-40
Trained Graduate Teacherசமூக அறிவியல்.அறிவியல் மற்றும் ஹிந்தி23-40
Primary teacherதொடக்கக்கல்வி23-40

கல்வித்தகுதி:

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட பாடங்களில் B.A / B.Sc மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி ஆசிரியர் பணிக்கு BA / B.Sc. / B.Com / B.Tech / B.B.A பட்டம் மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

இதர பணிகள்:

பதவியின் பெயர்வயதுகல்வி
Lab Assistant21-40அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு
Office Assistant21-40ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 5 வருட அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.ncsarakkonam.edu.in/ என்ற பள்ளியின் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Also Read : ரூ.40 ஆயிரம் சம்பளம்.. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி..!

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Headmistress

Navy Children School

INS Rajali, Arakkonam - 631 006

தொலைப்பேசி எண் : 9061752717 / 9488758004

மின்னஞ்சல் முகவரி: ncsarakkonam@yahoo.co.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.01.2023. எழுத்துத் தேர்வு 28.01.2023 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, School Teacher, Teaching