ரயில்வேயில் தேர்வு இல்லாமல் சம்பளத்துடன் பயிற்சி பணி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரயில்வேயில் தேர்வு இல்லாமல் சம்பளத்துடன் பயிற்சி பணி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரயில் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: December 30, 2019, 6:53 PM IST
  • Share this:
தென்னக ரயில்வேயில் 3,655 இடங்களுக்கு தேர்வு இல்லாமல் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சி(apprentice) அளிக்கப்படும் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னக ரயில்வே சார்பில் ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட 3,655 பணியிடங்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சி(apprentice) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் 1 முதல் 2 ஆண்டுகள். அந்த பயிற்சி காலத்தில் மாதம் 10,000 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான கல்வித் தகுதியாக 10 வகுப்பில் 50% மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும், ஐ.டி.ஐ தேர்ச்சியும் நியமிக்கப்பட்டுள்ளது.  இணையதளம் மூலம் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இந்த கட்டணம் திரும்ப பெற இயலாது. எழுத்துத் தேர்வு கிடையாது. 10, ஐ.டி.ஐ மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதேபோல எஸ்.சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க நாளை(31.12.2019) ஐந்து மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் முகவரி www.sr.indianrailways.gov.in.

Also see:

 
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading