Home /News /employment /

11 பொதுத் துறை வங்கிகளில் 6932 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

11 பொதுத் துறை வங்கிகளில் 6932 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

ஐபிபிஎஸ்

ஐபிபிஎஸ்

பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.

    மொத்த காலியிடங்கள்: 6932

    இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    ஆன்லைன் மூலம் தற்போது விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.



    விண்ணப்பம் செய்வது எப்படி?

    எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

    Click here to apply online for CRP PO/MT-XII” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

    பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.

    எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

    இதையும் வாசிக்க:   ஜேஇஇ 2வது அமர்வு முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது?

    இதர முக்கிய விவரங்கள்: 

    முன்-தேர்வு பயிற்சி : செப்டம்பர்/அக்டோபர் 2022

    ஆன்லைன் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்தல்: அக்டோபர் 2022

    கணினி வழியில் நடைபெறும் முதல்நிலை எழுத்துத் தேர்வு: நவம்பர் 2022

    கணினி வழியில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வு : நவம்பர் 2022

    நேர்முகத் தேர்வு : ஜனவரி/பிப்ரவரி 2023

    தற்காலிக ஒதுக்கீடு : ஏப்ரல் 2023
    Published by:Salanraj R
    First published:

    Tags: Banking jobs, Ibps

    அடுத்த செய்தி