அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களைக் கற்பிக்கு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த தமிழ் பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் முனைவர் பா. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.
பணி தொடர்பான விவரங்கள்:
பதவியின் பெயர் | மொத்த பணியிடங்கள் | கல்வித் தகுதி | ஊதியம்ஒரு மாதத்திற்கு |
ஆசிரியர்(தற்காலிகம்) | 6 (பல்கலைக்கழக துறைகளில்)17 (உறுப்புக் கல்லூரிகள்) | பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்), மற்றும் பிஎச்டி(அல்லது) பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்) மற்றும் NET/SLET/SET ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | ரூ. 25,000 (தொகுப்பூதியம்) |
இதையும் வாசிக்க: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கல்விச் சான்றிதழ்கள் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ 20.12.2022 (மாலை 5 மணிக்குள்) கீழ் குறிப்பிட்டுள்ள முகவூரியில் சமர்பிக்க வேண்டும்.
முகவரி
முனைவர் பா உமா மகேஸ்வரி
இயக்குநர்,
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்.
அசல் விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dirtamildvt@annauniv.edu ஆகும்.
இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது... கட் ஆஃப் மதிப்பெண் என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.