ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோவையில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை - மாதம் ரூ.20,000 வரை சம்பளம்

கோவையில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை - மாதம் ரூ.20,000 வரை சம்பளம்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

ITI Mechanic Jobs in coimbatore:: நேர்முகத் தேர்வு 19.10.2022ம் தேதிகாலை 10.00 மணிக்குதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோயம்புத்தூர் மாவட்டம், தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோய்தடுப்பு (Immunisation) திட்டத்தின் மூலம் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் Cold Storage Unit-ல்காலியாக உள்ள Refrigeration Mechanic -1 பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இது, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளது. இது குறித்த விண்ணப்பப் படிவம் மற்றும் மாவட்ட முகவரி coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள

  விரிவான விபரங்கள்:

  Refrigeration Mechanic -1 பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் கல்வித்தகுதி Certificate Course in ITI Mechanic in Refrigeration & Air Conditioning from recognized Institution தேர்ச்சி பெற்றும், இப்பணிதொடர்பாக குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

  இதையும் வாசிக்க: கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

  முற்றிலும் தற்காலிகமான இப்பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது வரம்பு 21-35 -ற்குள் (21-35 Years) இருத்தல் வேண்டும்.

  இதையும் வாசிக்க: தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணி.. ரூ.35,000 வரை சம்பளம்.. உங்களுக்கு செட் ஆகுமா?

  மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 08.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

  விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.10.2022 மாலை 5.00 மணி.

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

  உறுப்பினர் செயலர்

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

  மாவட்ட நல்வாழ்வு சங்கம்

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

  219, பந்தய சாலை

  கோயம்புத்தூர் – 641018.

  மேற்படி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 19.10.2022ம் தேதிகாலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Refrigeration Mechanic – 1 Application Form:

  Published by:Salanraj R
  First published:

  Tags: Government jobs, Jobs