ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐஏஎஸ் தேர்வுகளுக்கு மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி: உடனே விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ் தேர்வுகளுக்கு மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி: உடனே விண்ணப்பிக்கலாம்

குடிமைப் பணித் தேர்வுகள்

குடிமைப் பணித் தேர்வுகள்

Free Prepatory Training Class for UPSC Civil service Exams: கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  Uமீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை  செயல்படுத்தி வருகிறது.

  கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

  இத்திட்டத்தின்கீழ், பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்ப படிவங்களை சென்னை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

  விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கசுயமாக தொழில் தொடங்க விருப்பமா? அரசின் பயிற்சி முகாம் இருக்கு! விவரம் இதுதான்!

  அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயண செட்டி தெரு,  இராயபுரம், சென்னை-13.

  மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சென்னை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அல்லது சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 044-2999 7697 ஆகும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: UPSC