ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.20 கோடி நிதியுதவி: பிராணிகள் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - விவரம்!

ரூ.20 கோடி நிதியுதவி: பிராணிகள் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - விவரம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Vallalar Palluyir Kaapagangal Scheme:பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (SPCA), பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 'வள்ளளார் பல்லுயிர் காப்பகங்கள்' எனும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகளுக்கு தொண்டு செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

  இந்நிலையில், இத்திட்டத்தின்  கீழ் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் தெரிவித்துள்ளது.

  தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள், பிராணிகள் வளர்ப்போரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இருக்கும் பிராணிகள், காப்பகங்களில் உள்ள பிராணிகள் மற்றும் காயமடைந்த பிராணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கவும் ( Feeding and Medical Treatment),உடனடி மருத்துவ சேவை அளிப்பதற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்குவதற்கும் ( Ambulance Assistance),  "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" திட்டத்தில் ஆதரவற்ற பிராணிகளை வைத்து பாதுகாக்க ஏதுவாக புதியதாக உறைவிடங்கள் கட்டுவதற்கும் (construction of shelters,), தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் / பூனைகள் மற்றும் உரிமையாளர்களால் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ( , Animal Birth Control and immunization program)  மேற்கொள்ளவும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (SPCA), பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு அரசின் இந்த இணையதளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  Application for Financial Assistance:

  Published by:Salanraj R
  First published:

  Tags: Entrepreneurship, Money