அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் / ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முக தேர்வு
சென்னை, அண்ணாசாலையில் உள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிக்கான நிபந்தனைகள்:
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு
வயது: 18-50
யார் விண்ணப்பிக்கலாம்: படித்து வேலைவாய்ப்பு இல்லாத/சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள்.
விரும்பத்தக்கவை: காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில்
அனுபவம்; கணினி அறிவு; உள்ளூர் பற்றிய ஞானம்
மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெறாதவர்கள் ஆவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
சென்னை, அண்ணாசாலையில் உள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் 28.07.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.
நேர்முகத்தேர்வுக்கு வருவோர் தங்களின் தன் விவரக்குறிப்பு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் (ஏதாவது இருப்பின்) ஆகியவற்றுடன் வரவேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக ( தேசிய சேமிப்புப் பத்திரம், கே.வி.பி வாயிலாக) செலுத்த வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.