அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றத் தலைவர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ; ஜுலை 3. அதன்பின், பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
நாட்டின் அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியை ஒருங்கினைக்கும் அமைப்பாக இம்மன்றம் செயல்பட்டு வருகிறது. 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டு, நாடு முழுவதும் தொழிநுட்பக் கல்வியின் ஒத்திசைத்த மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாட்டினை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இம்மன்றம் மேற்கொள்ளும்.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தலுக்கான மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்கான அளவீடுகளை நிர்ணயிப்பதற்கும், தொழிநுட்ப கல்வி வணிக மயமாக்கப்படுவதை தவிற்ப்பதற்கு தேவையான அடைத்து நடவடிக்கைகளை இக்குழு மேற்கொன்டு வருகிறது.
தலைவர் பதவி:
இதன் தலைவர் மத்திய அரசால் பதவியமர்த்தப்படுவார்.
பதவியேற்கும் தேதியில் இருந்து முழுப் பதவிக்காலமாகிய மூன்றாண்டுகள் (அல்லது 65 வயது முடிவடையும் வரை) பதவி வகிப்பர். மத்திய அரசு இந்த பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிடலாம்.
60 வயது பூர்த்தியடையாத நபர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: 2,25,000 மற்றும் இதர படிகளும் வழங்கபபடும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.-education.go,v.in/en என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட நகல்கள் இணைக்க பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
Deputy Director (TE), Department of Higher Education' Ministry of Education,
Room No. 535-C, Cabin -E , shastri Bhawan,
New Delhi- 01
விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களுக்கும் தனது அலுவலரிடம் ( Head of the Organisation/employee) சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்ற மேலொப்பமும் பெற்றிருக்க வேண்டும்.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.