Home /News /employment /

தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசினர் சிறப்பு இல்லத்தில் உளவியலாளர் பணியாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இது தொடர்பாக இணையதள பக்கத்தில்  செங்கல்பட்டு ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல சிறார்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க ஆற்றுப்படுத்தினர்/ உளவியலாளர் பணியிடங்கள் இரண்டு எண்கள் ( 1 பெண் பணியிடம் உட்பட) ரூபாய் 1000/ வீதம் (5 நாட்கள்) மாதம் ரூபாய் 5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடைய, மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் ( https://chengalpattu.nic.in ) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர சான்றிதழ்களின் ஒளி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 12/09/2022ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டிய முகவரி கண்காணிப்பாளர் அரசினர் சிறப்பு இல்லம், பழைய தாலுகா ஆபீஸ் அலுவலம் அருகில் செங்கல்பட்டு 603 002 என்ற முகவரிக்கு தொலைபேசி எண். (044-2742 4458) விண்ணப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

    https://drive.google.com/file/d/1wHmnJwYM4eIdwBQvb1VKGi_J0xFv-nIW/view

    https://drive.google.com/file/d/1cZc2SLWpwkFyfoUVpyyCUS7uJh_b0p7G/view

    பெற இந்த பக்கத்தை பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி