ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... 1,021 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... 1,021 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

Assistant Surgeon Notification:உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தொடர்பாக 22.05.2020 தேதியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே, விண்ணப்பித்த தேர்வர்கள் மீண்டும் தற்போது புதிதாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  காலிப்பணியிடங்கள்: 1021

  இன்று (அக்டோபர் 11, 2022) தொடங்கும் விண்ணப்ப செயல்முறையானது வரும்  25ம் தேதியுடன்  முடிவடைகிறது.

  சம்பள விபரம்: ரூ.56100 முதல் 1,77,500  வரை (நிலை-22)

  கல்வித் தகுதி: மருத்துவ கல்வி வாரியத்தால் அங்கீகரிப்பட்ட எம்.பி.பி.எஸ் பாடநெறியில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  12 மாதங்களுக்கு குறையாது, சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி (compulsory rotatory internship) முடித்திருக்க வேண்டும்.

  தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் கீழ் பெயர் பதிவு  செய்திருக்க வேண்டும்.

  விண்ணப்பபம் செய்வது எப்படி? www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான,  விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் இனத்தவர், பட்டியலின அருந்ததியினர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

  Assistant Surgeon job

   

  தெரிவு முறை:  தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெறும் தேர்வர்கள், எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  இதையும் வாசிக்க: NCERT கல்வி நிறுவனத்தில் 292 காலியிடங்கள் அறிவிப்பு

  வயது வரம்பு:01.07.2022 அன்று பட்டியலின, பட்டியலின பங்குடியின, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு விண்ணப்பதாரர்கள் 59க்கு  கீழ்  இருக்க வேண்டும். இதர வகுப்பினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 37க்கு கீழ் இருக்க வேண்டும்.   

  MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) NOTIFICATION NO: 11/MRB/2022 

  பின்குறிப்பு: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தொடர்பாக 22.05.2020 தேதியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே, விண்ணப்பித்த தேர்வர்கள் மீண்டும் தற்போது புதிதாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஏற்கனவே, தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தால் தற்போது மீண்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

  இதையும் வாசிக்கபொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment