ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு : மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு : மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Free UPSC Free Coaching for women: ராணிமேரி கல்லூரி அல்லது  மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள்  நடைபெறும். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி  (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது.

  அந்த வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம். பயிற்சி வகுப்புகள்:  சென்னையில் இயங்கும்  இராணி மேரி கல்லூரி, மதுரையில் இயங்கும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

  முக்கியமான நாட்கள்:

  ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 14.11.2022 தேதி முதல்  24.11.2022 வரை.

  எழுத்துத் தேர்வு: 01-12-2022 (முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை) 

  எழுத்துத் தேர்வு முடிவுகள் : 05-12-2022   

  வயது வரம்பு: 14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேலும், 32  வயது பூர்த்தி அடையாதவராகவும்  இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரங்களுக்கு 5 ஆண்டுகள் வயது வர்மப்பில் சலுகை உண்டு. பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்  3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.

  பயிற்சி காலம்: குறைந்தது 6 மாதம்

  ராணிமேரி கல்லூரி அல்லது  மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள்  நடைபெறும். 

  இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வர்கள் கவனத்திற்கு: மூலச் சான்றிதழ்கள் பதிவேற்றம் தொடங்கியது

  தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்  தேர்ந்தெடுக்கப் படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.      

  விண்ணப்பம் செய்வது எப்படி?  இராணி மேரி கல்லூரி  :, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி  இணையதளத்தில்  விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வரும் 24ம் தேதிக்குள்  அனுப்பி வைக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கவங்கி வேலைவாய்ப்பு... 710 காலியிடங்கள் - உடனடியாக விண்ணப்பியுங்கள்

  விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை ( demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.

  free coaching for the UPSC (civil services) examination    

  Published by:Salanraj R
  First published:

  Tags: Government jobs, UPSC