ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மதுரை: ஜீப் ஓட்டுநர் பணி காலிபணியிடம்.. ரூ.62,000 வரை மாதச் சம்பளம் - விவரம்!

மதுரை: ஜீப் ஓட்டுநர் பணி காலிபணியிடம்.. ரூ.62,000 வரை மாதச் சம்பளம் - விவரம்!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Madurai Job alerts: Madurai Job alerts: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18-37 வயதுக்கு கீழ் இருக்கும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை  மாவட்டம்,  ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் பழங்குடியினர்  பிரிவில்  காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பதவியின் பெயர் : ஜீப்பு ஓட்டுநர்

  காலிப்பணியிட எண்ணிக்கை: 1

  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18-37 வயதுக்கு கீழ் இருக்கும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் - முன்னாள் ராணுவத்தினரின் அதிகபட்ச வயது 55க்கு கீழ் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதர தகுதிகள்: 

  மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

  5-ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

  விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 01.11.2022  முதல் 15.11.2022 மாலை 05.45 வரை  

  ஊதிய விபரம்:  ரூ. 19500 - 62000/- மற்றும் இதர படிகள்

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

  மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி).

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

  மதுரை - 20.

  நிபந்தனைகள்:

  1. மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  2. விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, இருப்பிடம் (ரேசன் கார்டு மற்றும் ஆதார் காட்டு), சாதிச்சான்று, முன்னுரிமை சான்று, இதர சான்றிதழ் நகலினை சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

  3. இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  4. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

  5. நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

  6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (call Letter) அனுப்பி வைக்கப்படும்.

  இதையும் வாசிக்க: 12ம் வகுப்பு போதும்... தமிழக கடலோர காவல்படையில் வேலை - முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!

  7. விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன்  மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (வளர்ச்சி)  நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 15.11.2022 தேதியன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  8. நியமனத்தை இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு.

  இதையும் வாசிக்க:  மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  இப்பணியிடம் தொடர்பான விபரங்கள் மற்றும் விண்ணப்படிவம் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்திலும், தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Service Portal) www.ncs.gov.in மற்றும் மதுரை மாவட்ட இணையதளம் www.madurai.nic.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment, Tamil Nadu Government Jobs