ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்: 14 அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்: 14 அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

14 அலுவல்சாரா உறுப்பினர்கள்  (Ex-Officio Members) நியமனம் செய்வதற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம்   "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்  உருவாக்கப்பட்டது.

  இவ்வாரியத்திற்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள்  (Ex-Officio Members) நியமனம் செய்வதற்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

  காலியிடங்கள் விவரங்கள்:

  கல்வியாளர்கள் - 2 நபர்கள்

  பெண் தொழில் முனைவோர்கள் - 2 நபர்கள்

  கைம்பெண்கள் பிரதிநிதிகள் - 4 நபர்கள்’ (பட்டியலினத்தவர் - 1. பழங்குடியினர் -1, இதர வகுப்பினர் – 2)

  பெண் விருதாளர்கள் - 2 நபர்கள்

  தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் - 4 நபர்கள்

  இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து நியமனம் செய்வதற்கு ஏதுவாக ,தகுதி மற்றும் அனுபவமுள்ள நபர்களிடமிருந்து தனித்தனி விண்ணப்பங்களை கல்வித்தகுதி, அனுபவங்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் 31.10.2022 அன்று மாலை 05.30 மணிக்குள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  முகவரி: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை - 05.

  இதையும் வாசிக்க: பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம்!

  கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான தகுதி குறித்த விவரங்கள் www.tn.gov.in/(Social Welfare and Women Empowerment Department) என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Job Vacancy, Recruitment