கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை
www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 29.07.2022.ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையாளர், மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், பாகோடு அஞ்சல் -629168 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
வேலைக்கான விவரம் :
காலியாக உள்ள பணிகளின் பெயர் |
பதிவு எழுத்தர் , இரவு காவலர் , அலுவலக உதவியாளர் |
சம்பள விவரம் |
ரூ.15,700 - ரூ.50,000 வரை இந்த வேலைக்கு சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
வயது விவரம் |
ஆதி திராவிடர் 37 வயது , பழங்குடியினர் 34 வயது , பிற்படுத்தப் பட்டோர் 34 வயது , பொதுப்பிரிவினர் 32 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை |
பதிவு எழுத்தர் - 01
இரவு காவலர் - 01
அலுவலக உதவியாளர் - 03 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் |
29/07/2022 மாலை 5.45 மணிவரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். |
கல்வித் தகுதி விவரம் |
8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். |
நிபந்தனைகள் :
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் - 629168 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 29.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.