ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கன்னியாகுமரி திருவட்டார் ஊராட்சியில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு

கன்னியாகுமரி திருவட்டார் ஊராட்சியில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 05.07.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம்-629177 என்ற முகவரிக்கோ விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

பணியிடம்GT பொது பிரிவினர்SC(a)-w.DW ஆதிதிராவிடர் , அருந்ததியர் பெண் ஆதரவற்ற விதவைMBC/DNC மிகவும் பிற்படுத்த பட்டோர் மற்றும் சீர் மரபினர்BC other then muslims (பிற்படுத்தப்பட்ட இனத்தவர் முஸ்லீம் தவிர )
ஈப்பு ஓட்டுநர்01---
அலுவலக உதவியாளர்01010101

நிபந்தனைகள்:

  • நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
  • நேர்காணல் நடைபெறும் நாள் , இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

தகுதிகள் : 

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்டசெல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • வாகனம் ஒட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்

First published:

Tags: Job Vacancy