வேலை தேடுபவரா? Apna மொபைல் செயலி பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

Apna App

ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆப்னாவின் செயலியை, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்னாவை பயன்படுத்தி 15 மில்லியன் வேலைவாய்ப்பு நேர்காணல்கள் நடைபெற்றுள்ளன.

  • Share this:
தற்போதைய காலகட்டத்தில் எந்த படிப்பு முடித்திருந்தாலும் வேலை வாய்ப்பு என்பது காணல் நீராகவே இருக்கிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்திலும் ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் தங்களின் வேலைகளை இழந்துவிட்டு குடும்ப செலவுகளை ஈடுகட்ட வருமானமின்றி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இது போன்ற நிலையில் வேலை தேடுவோருக்கு உதவுகிறது Apna எனும் மொபைல் செயலி.

வேலை தேடுவோரையும், வேலை தருவோரையும் ஒருங்கிணைக்கும் இந்த செயலியில், போஸ்ட் செய்யப்படும் வேலை வாய்ப்பு விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது என்பதால் இதில் மோசடிக்கு வேலையில்லை என கூறுகின்றனர். இந்த இலவச செயலியை வேலை தேடுவோர் பதிவிறக்கம் செய்து சுலபமாக பணி வாய்ப்புகளை பெற முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான நிர்மித் பரிக் என்பவரால் தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக திரட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, சண்டிகர் என 14 நகரங்களில் சேவையளித்து வரும் ஆப்னா செயலி, விரைவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விஸ்தரிக்கப்படும் என கூறுகிறார்கள்.

Also Read:   தாயுடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்!

ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆப்னாவின் செயலியை, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்னாவை பயன்படுத்தி 15 மில்லியன் வேலைவாய்ப்பு நேர்காணல்கள் நடைபெற்றுள்ளன.

சேல்ஸ் ஏஜெண்டுகள், பெயிண்டர்கள், கார்பெண்டர்கள் என 70க்கும் மேற்பட்ட பனி வாய்ப்புகள் ஆப்னாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல Byju’s, பிளிப்கார்ட், டன்ஸோ, டீம்லீஸ், ஜொமேட்டோ, பர்கர் கிங் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்கள் ஆப்னாவில் இணைந்துள்ளன.

Also Read:   ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!

2019ம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் பாட்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆப்புக்கு பெயர் வைத்ததாக கூறும் இதன் நிறுவனர் நிர்மித், பல்வேறு இந்திய மொழிகளில் இந்த ஆப்பினை பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது ரெஸ்யூம் தயாரிப்பது, வேலை வாய்ப்பு தகுதிகளை மெருகேற்றிக்கொள்வது, துறைசார்ந்த பயிற்சிகள் என உலகத்தர சேவைகளையும் அளிக்க இருப்பதாக கூறும் ஆப்னாவின் நிறுவனர் நிர்மித் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன், சிறுபான்மை ஆணையம், யூனிசெஃப் போன்ற அமைப்புகளுக்கும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்தார்.
Published by:Arun
First published: