தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.
குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகிய இணையதள பக்கங்களில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டிற்குள்ளாகவே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.