ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்: தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்: தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna university jobs : அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

    பணியின் விவரங்கள்:

    பதவியில் பெயர்பணிக்காலம்சம்பளம்
    System Architect6 மாதம்ரூ.45,000/-
    System Analyst6 மாதம்ரூ.35,000/-
    System Administrator6 மாதம்ரூ.35,000/-
    Programmer Analyst6 மாதம்ரூ.25,000/-
    Software Developer6 மாதம்ரூ.20,000/-
    Peon cum Driver6 மாதம்தினசரி சம்பளம்

    கல்வித்தகுதி:

    B.E/B.Tech/ MCA or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

    Peon cum Driver பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் தேவை.

    இதர தகுதிகள்:

    Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base

    Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.

    தேர்வு செய்யப்படும் முறை:

    விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பத்தை பதிவிறக்க செய்ய : https://www.auegov.ac.in/career.html

    Also Read :தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மாணவர்களுக்குச் சம்பளத்துடன் தொழிற்பயிற்சி.. எப்படி விண்ணப்பிப்பது?

    குறிப்பு:

    ஒரே விண்ணப்பதார் வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கையில் ஒவ்வொரு பதவிக்குத் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

    The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025.

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 மாலை 5.00 மணி வரை.

    மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Anna University, IT JOBS