Anna university Jobs: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் ஒன்றான குரோமேபேட்டையில் அமைந்துள்ளது சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT Campus, Anna University) Professional Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை: 6
பதவியின் பெயர்: Professional Assistant (தாற்காலிக, தினக்கூலி ஊதிய முறையில்)
துறை: கணினி அறிவியல்
ஊதியம்: நாளொன்றுக்கு ரூ. 821/-
கல்வித் தகுதி: பிஇ/பிடெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அறிவிக்கப்பட்ட பதவிக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வரப்பெற்றால், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Dean,
Madras Institute of Technology Campus
Anna University
Chromepet
Chennai 600044
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள், தங்கள் விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 18-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: 2023ல் உங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க தேவையான திறன்கள் என்னென்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.