சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் திட்டப்பணி மேலாளர் (Project Associate) பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பி.இ,பிடெக் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்:
1. திட்டப்பணி மேலாளர் - II (Project Associate- II)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: ஏதேனும் படிப்பில் பொறியியல் பட்டம் அல்லது எம்சிஏ பட்டம் பெற்றவர்களும், எம்இ/எம்.டெக் பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றவர்களும்இதற்கு விண்ணப்பிக்கலாம். (B.E/B.Tech (Any branch) or MCA and M.E/M.Tech (Any branch) or MBA)
மேலும், தகவல் பகுப்பாய்வு துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000/-
2. திட்டப்பணி மேலாளர் - Project Assistant I
காலியிடங்கள்: 4
கல்வித் தகுதி: எதனெனும் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் (B.E/B.Tech (Any branch) or MCA).
சம்பளம்: ரூ.25,000 முதல் 35,000/- வரை
இது, முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும்.
மேற்கண்ட, பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம், அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான நபர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: எஸ்எஸ்சி 4500 காலியிடங்கள்: இரண்டே மாதங்களில் தேர்வை கிராக் செய்வது எப்படி?
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, The Director, Internal Quality Assurance Cell, CPDE Building 1st Floor, Anna University, Chennai – 600025 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.