ANNA UNIVERSITY RECRUITMENT NOTIFICATION: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க கவுன்சிலில் திட்ட இணையாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுட்டள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 6
இது முற்றிலும் தற்காலிகமான நியமனமாகும். 12 மாத ஒப்பந்தகாலத்திற்குப் பிறகு, விண்ணப்பிப்பதாரரின் செயல்திறன் அடிப்படையில் பணியின் காலம் நீட்டிக்கப்படும்.
பணியிடங்கள்:
திட்ட உதவியாளர் (கணக்கு), திட்ட உதவியார்(நிர்வாகம்) தவிர்த்து, இதர அனைத்து பதவிகளுக்கு பணி முன் அனுபவம் கட்டாயமாகும். எனவே, விண்ணபப்தார்கள் தற்போது பணிபுரியும் விவரங்களை மறக்காமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பம் செய்வது எப்படி? தபால் மூலமே விண்ணப்பங்கள் பெறப்படும்.
தற்போது பணிபுரியும் விவரங்களுடனும் (பெரும்பாலான பணிகளுக்கு பணி முன்அனுபவம் தேவைப்படுகிறது) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், மற்றும் தேவைப்படும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடனும் கீழ்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபாவில் 30.07.2022 தேதி மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Coordinator,
Technology Enabling Centre ,
Room no.304, Second Floor,
Platinum Jubilee Building,
AC Tech Campus,
Anna University,
Chennai 600025.
அனைத்து தொடர்புகளும் விண்ணப்பித்தார் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் வாசிக்க: IBPS Admit Card Released: ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது
கல்வித் தகுதி, பணியின் தன்மை, விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ANNA UNIVERSITY RECRUITMENT NOTIFICATION (TEMPORARY POSITIONS) உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.